செனவாங் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆடவர் சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்தார் – போலீஸ்

பெட்டாலிங் ஜெயா:

சிரம்பான், செனவாங் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு வீட்டின் முன் அறுத்து கொலை செய்யப்பட்ட 28 வயது ஆண், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் இருவருக்குமிடையிலான கள்ளத்தொடர்பை அறிந்து கோபமடைந்ததாகவும், கொலைசெய்யப்பட்ட ஆடவர் ஒரு மாதமாக சமூக வலைதளம் மூலம் சந்தேக நபரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார்,” என்று, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் அமாட் ஜாஃபிர் யுஸ்ஷோப் கூறினார்.

சந்தேக நபருக்கு முந்தைய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்றும், அவர் எந்தவித போதை மருந்துப் பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் ஜாஃபிர் தெரிவித்தார்.

31 வயது சந்தேக நபர், அந்த ஆடவரை மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும், பின்பு போலீசார் குறித்த கத்தியை பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ஆகஸ்ட் 18 வரை போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here