பணமோசடி: RM16 பில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் பறிமுதல்!

கோலாலம்பூர்:

பல்துறை பணிக்குழு என்ற MATF, கடந்த ஆண்டு, அமைக்கப்பட்டதிலிருந்து, RM16 பில்லியனுக்கும் அதிகமான நிதியும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊழல், பணமோசடிக்கு எதிராக, போராடுவதில் இந்த பணிக்குழுவின் வெற்றியை எடுத்துரைத்த MACCஇன் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ அஸாம் பாக்கி (Tan Sri Azam Baki), இன்று, இதனை அறிவித்தார்.

இதனிடையே இந்த குற்றச்செயல்களில் தொடர்புடைய, 61 பேர், கைது செய்யப்பட்டுள்ளதாகவும்அவர்களில் 34 பேர் அரசு ஊழியர்கள் என்றும், 25 பேர், ஏற்கனவே, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு மட்டும் இந்த பணிக்குழு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், கிட்டத்தட்ட, ஒரு பில்லியன் ரிங்கிட், சொத்துகளைப், பறிமுதல் செய்துள்ளது.

MACC, காவல்துறை, சுங்கத் இலாக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய MATF விசாரணைகளை, ஒழுங்குபடுத்துவதற்கும், சட்டவிரோத நிதியை மீட்டெடுப்பதற்கும்,
இணைந்து செயல்படுகிறது.

எனவே தான், சமீபத்தில், 1MDB நிதியை, மீட்டெடுத்ததும், இதற்கு ஒரு சான்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here