கோலாலம்பூர்: புயல் பாதிப்புக்கு, பல ஏஜென்சி குழுவின், விரைவானப் நடவடிக்கை!

கோலாலம்பூர்:

நேற்று தலைநகர் கோலாலம்பூரில் கடுமையான மழை புயல் காரணமாக நகரின் பல பகுதிகளில் பெரும் சேதங்களும் சேவை நிறுத்தங்களும் ஏற்பட்டது.

எனவேதான் நிலைமையை சீர்படுத்த, கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL, தீயணைப்பு மீட்பு இலாகா, பொது பாதுகாப்பு படை, மேலும் கோலாலம்பூர் கட்டளை கட்டுப்பாடு மையம் ஆகிய ஏஜென்சிகள் ஒன்றிணைந்து விரைவாக செயல்பட்டன.

இந்த ஏஜென்சிகள் குழுக்களாக ஒன்றிணைந்து, பல பகுதிகளில் குறிப்பாக Jalan Pantai Murni 7, Jalan Bangsar, Tunku Jaafar சாலை சந்திப்பு, Jalan Cenderasari, ஆகிய இடங்களில், புயலினால் சரிந்து விழுந்த மரங்களையும், குப்பைகளையும் அகற்றி பாதிக்கப்பட்ட சாலைகளின் போக்குவரத்தை உடனடியாக சீர்படுத்தனர்.

அதுமட்டுமின்றி பந்தாய் டாலாமில், பலத்த காற்று வீசியதில், Sri Cempaka வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூறைகள் தகர்த்து எரியப்பட்டது, சொத்துக்களும் வாகனங்களும் சேதமடைந்தன. இருப்பினும் இச்சம்பவத்தில் உயிருடற் சேதங்கள் ஏற்படவில்லை.

இதற்கிடையில், மீட்பு துப்புரவு பணிகளில் விரைவாக ஈடுபட்டு பணி செய்த அனைத்து ஏஜென்சிகளுக்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here