கோலாலம்பூர்:
13 மில்லியனுக்கும் மேற்பட்ட, மலேசியர்கள், ஆகஸ்ட் 31-ஆம் தேதி, முதல், சும்பங்கான் அசாஸ் ரஹ்மா’ (சரா’ – SARA) RM100 ரிங்கிட் மானியத்தைப், பெற்றுள்ளனர் என்று, இரண்டாம் நிதியமைச்சர், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
மேகா இ-இன்வாய்ஸ் ரோட்ஷோ 2025’ (*Mega e-Invoice Roadshow 2025*) தொடக்க, விழாவில், பேசிய அவர் பல பயனர்கள் தங்களின், சாரா’ (SARA) மானியத்தை முழுமையாக செலவழித்துவிட்டனர் என்றும் மற்றவர்கள், இன்னும், நிலுவைத் தொகையை, வைத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த மானியத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை, பயன்படுத்தலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த, இந்த SARA உதவித்தொகை திட்டம், 18 அல்லது அதற்கும் மேற்பட்ட, வயதுடைய, அனைத்து, மலேசியர்களுக்கும், கிடைக்கும்.
இந்த மானியத்தை மைடின்’ (*Mydin), லோட்டஸ்’ஸ்’ (Lotus’s), எகொன்சேவ்’ (Econsave*), 99ஸ்பீட்மார்ட்’ (99Speedmart), உள்ளூர், மளிகைக் கடைகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 4,100-க்கும் மேற்பட்ட, வணிக தளங்களில் (outlets), பயன்படுத்தலாம்.
இது, அதிகரித்து வரும், செலவுகளை, சமாளிக்கும், குடும்பங்களுக்கு, நேரடி, நிவாரணத்தை, உறுதி செய்கிறது.





















