வீடு- வாகனங்கள் எரிப்பு; குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவர்

முவார், குடும்பத்தினரின் வீடு, 2 வாகனங்களை எரியூட்டதா சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒருவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

முன்னாள் பொறியிலளாரான முகமட் நபி அபு பாக்கார் (வயது 32) எனும் அந்த நபர் இம்மாதம் 17ஆம் தேதி ஜாலான் ஜெராம் கம்போங் தெங்காவில் உள்ள தமது தந்தையின் வீட்டை எரியூட்டதாக குற்றவியல் சட்டம் பிரிவு 436இப் கீழ் முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதே சமயத்தில் தமது தாயார், தம்பிக்கு சொந்தமான கார், மோட்டார் சைக்கிளை எரியூட்டதாக அதே சட்ட பிரிவின் கீழ் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி மெத்தாபெத்தமின் போதை பொருள் பயன்படுத்தியிருந்த அந்த ஆடவர் தமது தந்தையையும் காயப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3 பிள்ளைகளுக்கு தந்தையான முகமட் நபி மாஜிஸ்திரேட் டலிலா காலிட் முன்னிலையில் அக்குற்றங்களை ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கு விசாரணையில் டிபிபி தரப்பில் டியானா நஜிஹா ஆஜரான நிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக யாரும் ஆஜராகவில்லை.
இதனையடுத்து நீதிமன்ற தரப்பு இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here