பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் சம்பாதித்த பணம் நம்மிடமே தங்க வேண்டும் என்றும்தான் அனைவரும் விரும்புவோம். அப்படி பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்குவதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பணத்தை வைக்கக்கூடிய கல்லாப்பெட்டியை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பூஜை முறை ஒன்று இருக்கிறது. இந்த பூஜையை கல்லாப்பெட்டியில் செய்யும் பொழுது அந்த கல்லாப்பெட்டியில் அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பண வரவை அதிகரிக்கும் பூஜை பொதுவாகவே பணம் பணத்தை ஈர்க்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பணம் தொடர்பான சில பொருட்களை பணத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது பணம் அதிக அளவில் வந்து சேரும் என்றும் கூறுவார்கள். பணத்தை எந்த இடத்தில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும் எந்த இடத்தில் வைத்தால் பண விரயம் ஆகும் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்ட பணத்தை நாம் நம்மிடமே தக்கவைத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவோம். அதுதான் பணம் வைக்கக்கூடிய கல்லாப்பெட்டி. இந்த கல்லாப்பெட்டியை மகாலட்சுமியாக பாவித்து செய்வதால் பணவரவு என்பது அதிகரிக்கும்.
இந்த பூஜையை செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 5 30 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்வதற்கு முன்பாக சுத்தமாக குளித்து முடித்து இருக்க வேண்டும். மேலும் இந்த பூஜையை செய்வதற்கு வெள்ளை நிற வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த பூஜைக்கு மல்லிகைப்பூ மிகவும் உகந்தது. முதலில் கல்லாப்பெட்டியை எடுத்து அதில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த கல்லாப்பெட்டிக்கு முன்பாக வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பையும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அந்த கல்லாப்பெட்டிக்குள் வாசனை மிகுந்த மல்லிகை பூவை வைத்து “பணம் தனம் தினம் தினம்” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி வாசனை மிகுந்த சந்தன ஊதுபத்தியால் ஆராத்தி காட்ட வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறும்பொழுதும் ஊதுபத்தி தூபத்தை காட்ட வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு பச்சை கற்பூரத்தை பொடியாக நுணுக்கி கல்லாப்பெட்டியில் தூவி விட வேண்டும். கல்லாப்பெட்டியை சுற்றிலும் தூங்கி விட வேண்டும்.
பிறகு நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தில் ஏதாவது ஒரு தொகையை எடுத்து அதை நன்றாக சுருட்டி அதை பச்சை நிற நூலால் கட்டி அந்த கல்லாப்பெட்டிக்குள் வைக்க வேண்டும். பிறகு கல்லாப்பெட்டிக்கு முன்பாக வைத்த இனிப்பு பொருளை வடக்கு திசை பார்த்தவாறு தூவி விட வேண்டும். கல் உப்பை சமையலுக்கு எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி புரட்டாசி வியாழக்கிழமை மகாலட்சுமிக்குரிய குபேர நேரத்தில் இந்த கல்லாப்பெட்டி பூஜையை செய்யும் பொழுது நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவு உண்டாகும்.
பணத்தை சேர்த்து வைக்கக்கூடிய கல்லாப்பெட்டியை மகாலட்சுமியாக பாவித்து இந்த முறையில் பூஜை செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் கல்லாபெட்டி நிரம்ப பணம் வரவு உண்டாகும்.