மலாக்கா AMJ அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 6 பேர் காயம்

மலாக்கா:

இன்று அதிகாலை செங் பகுதியில் உள்ள Shell பெட்ரோல் நிலையம் அருகே, அலோர் காஜா–மலாக்கா தெங்கா–ஜாசின் அதிவேக நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

காலை 6.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் Mitsubishi Triton, இரண்டு BMW கார்கள், Perodua Axia, Perodua Myvi, Nissan Almera ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் Mitsubishi Triton, கார் ஓட்டுனர் சாலை தடுப்பை மோதி, எதிர்புற பாதையில் புகுந்து பிற வாகனங்களை மோதியதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கார் கவிழ்ந்ததில் அதிலிருந்த ஆறு பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில், மேற்கொண்டு சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 (பிரிவு 44(1A)) கீழ் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் காரின் டாஷ்காம் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here