கோலாலம்பூர்:
சிலாங்கூர் பெர்மைசூரி தெங்கு பெர்மைசூரி Norashikin அவர்களின் தாயார் Esah Tahar அவர்கள் தனது 82ஆவது வயதில் இன்று மறைந்தார்.
சிலாங்கூர் அரசவை வெளியிட்ட தகவலில், அவர் இன்று அதிகாலை 5.15 மணிக்கு டாமான்சாரா மருத்துவமனையில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இன்றைய ஜோகூர் தொழுகைக்குப் பிறகு, ஷா ஆலாம் அரச மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




















