SSPN (BMS) 2025 சேமிப்பு மாதம்: சேமிப்புக் கலாச்சாரத்தை PTPTN தொடர்ந்து வலுப்படுத்துகிறது

(தி.மோகன், ஜெனகன் சிவா)

தேசிய உயர் கல்வி நிதியகம் (PTPTN) SSPN (BMS) 2025 சேமிப்புத் திட்டத்தை அக்டோபர் 31ஆம் தேதி உலக சேமிப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது. இங்கு ஷா ஆலம் சென்ட்ரல் ஐ – சிட்டி மாலில் உயர் கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அனிஸி பின் இப்ராஹிம் தொடங்கி வைத்தார்.

Simpan SSPN (BMS) 2025 மாதமானது பிடிபிடிஎன் signature PTPTN திட்டமாகும். மலேசியர்களின் பிரதான சேமிப்பு தேர்வாக Simpan SSPN சேமிப்புத் திட்டத்தைப் பிரபலப்படுத்தும் இலக்கைக் கொண்டிருக்கிறது.

2018ஆம் ஆண்டு தொடங்கி 8ஆவது ஆண்டாக இந்த சேமிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. BMS 2025 செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி 2025 நவம்பர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கான அறிமுகம் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தேசிய அளவில் நடத்தப்பட்டது. அதேசமயம் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. BMS இம்முறை Pengembaraan (Adventures) என்ற கருப்பொருளில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “Jom jadi Superhero Anak Anda” என்ற சுலோகத்தைக் கொண்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை முறை ஆகியவற்றிற்கு ஏற்புடையதாக இந்த கருப்பொருள் அமைந்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, கல்விப்பயணம், புதிய தேடல்களையும் சவால்களையும் கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

ஆக்ஷன் பாட்டுப் போட்டியில் முதலிடத்தை வென்று 3,750 ரிங்கிட் பரிசுத் தொகைக்கான மாதிரி காசோலையுடன் இளம் பிள்ளைகள் டத்தோ டாக்டர் அனிஸி (வலமிருந்து ஐந்தாவது).

சேமிப்பு என்பது நேசம், பொறுப்புடைமை, நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாகும். நம்முடைய பிள்ளைகள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் தங்களது கல்விக் கனவை விரட்டிக் கொண்டு நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ளும் இலக்கையும் இது வகுத்துத் தந்திருக்கிறது.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பல்வேறு உற்சாகமளிக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வண்ணம் தீட்டுதல், Pertandingan Action Song, PTPTN Esport Challenge, Baby Merangkak Race Cu நிகழ்ச்சிகளில் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் எழுச்சியுடனும் பங்கேற்றனர். அதேசமயம், பொதுமக்கள் PTPTN முகப்பிடங்களில் கணக்குத் திறந்து பிரத்தியேக நினைவுச் சின்னத்தையும் பெற்றுச் சென்றனர்.

PTPTN உயர்நிலை நிர்வாகத்தினர், வியூகப் பங்காளிகள், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், போட்டியில் பங்கேற்ற பிள்ளைகள் ஆகியோருடன் டத்தோ டாக்டர் அனிஸி.

BMS 2025 சேமிப்புத் திட்டமானது தாய் தந்தையரை சூப்பர் ஹீரோவாக பிள்ளைகள் போற்றி மகிழ்வதை உறுதி செய்யும் ஒரு திட்டமாக
அமைந்திருக்கிறது. தங்களுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு முறையான நிதி நிர்வாகத்தையும் திட்டமிடலையும் பெற்றோர் கொண்டிருப்பதற்கு இத்திட்டம் பெரும் பலமாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ டாக்டர் அனிஸி, பிள்ளைகளின் உயர் கல்விக்கான சேமிப்பானது அவர்களின் நீண்டகால முதலீடாகும். தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை வழங்கக்கூடிய முக்கியத்துவத்தையும் இத்திட்டம் வழங்குகிறது என்று கூறினார்.
இந்த சேமிப்பானது அதிகரித்து வரும் உயர்கல்வி செலவினங்களை எதிர்கொள்வதற்கு விவேகத்துடனும் பொறுப்புடைமையுடனும் தயார்ப்படுத்துவதற்கு உதவுகிறது.

2025 ஆகஸ்டு 31ஆம் தேதி வரை Simpan SSPN திட்டத்தில் 7.09 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டு 22.31 பில்லியன் ரிங்கிட் வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. BMS திட்டத்தின் கீழ் இவ்வாண்டு SSPN சேமிப்புத் திட்டத்தில் 220 மில்லியன் ரிங்கிட் சேமிப்பை இலக்காகக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் PTPTN தலைமைச் செயல் அதிகாரி புவான் மஸ்துரா பிந்தி முகமட் காலிட், பிடிபிடிஎன் தலைமை நிதி அதிகாரி அஸார் பின் அமாட், PTPTN தலைமை நிர்வாக அதிகாரிகள், வியூகப் பங்காளிகள், வெற்றியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், PTPTN வாடிக்கையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டான் வாங் -ஆசிரியர்

வியக்கத்தக்க சேமிப்புத் திட்டம்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கு Simpan SSPN -இல் சேமித்து வருவதாக டான் வாங் (வயது 50) என்ற ஆசிரியர் பெருமையுடன் குறிப்பிட்டார். தன் பிள்ளைகளுக்காக செய்திருக்கும் இந்த முதலீடானது, போட்டித் தரவல்ல லாப ஈவுத் தொகையையும் வழங்குகிறது. இது ஒரு மிகச் சிறந்த சேமிப்புத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இன்றைய இந்த நிகழ்ச்சியில் Simpan SSPN சேமிப்புத் தொகையை அதிகரிப்பதற்காக தாம் வந்ததாக சொன்னார். 

முகமட் சைஃபுல்லா ருஸ்லி -விரிவுரையாளர்

அரசாங்கத்தின் உத்தரவாதம்பெற்ற சேமிப்பு
இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு விரிவுரையாளரான முகமட் சைய்ஃபுல்லா ருஸ்லி (வயது 38) Simpan SSPN அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்றது. இதனால் மிக தைரியமாக இதில் சேமிப்பைத் தொடங்கலாம். தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஆக்கப்பூர்வமான ஒரு நிதி வளத்தை இந்தச் சேமிப்புத் திட்டம் வழங்குகிறது.உயர்கல்விக் கனவுகளை பிள்ளைகள் எவ்விதத் தங்குதடையின்றி நனவாக்குவதற்கு Simpan SSPN ஆக்கப்பூர்வமான பலன்களைத் தருகிறது என்று கூறினார்.

தெ சொக் கார் -ஆசிரியர்

2025 Action Song போட்டி வெற்றியாளர்
இன்றைய நிகழ்ச்சியில் தன் பிள்ளைகளுடன் தன் மாணவர்கள் பங்கேற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதில் என் மாணவர்கள் 2025 Action Song போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்று பத்து பஹாட் புக்கிட் திங்கி பாசிர், சின் ஹுவா ஆரம்ப சீனப்பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றும் தே சொக் கார் சொன்னார்.

அதே சமயத்தில் உயர் கல்விக்கான சேமிப்புத் திட்டம் குறித்த நம்பிக்கை விதைகள் பிள்ளைகளின் சிந்தனையில் விதைக்கப்பட்டிருப்பது ஓர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சேமிப்பின் அவசியம் அவர்களுக்குத் தெளிவாகச் சிந்தனையில் பதியமிடப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வருமான வரிவிலக்கு அளிக்கும் சிறப்புச் சலுகையையும் SSPN சேமிப்பு மலேசிய மக்களுக்கு வழங்குகிறது. வைப்புத்தொகைக்கு Takaful காப்புறுதி பாதுகாப்பு, தகுதிபெற்ற ஒரு
குடும்பத்திற்கு 10,000 ரிங்கிட் ஒருமுறை மானியம், இலவசமாக வழங்கப்படும். ஷரியா விதிமுறைகளுக்கு உட்படுதல், போட்டித் தன்மைமிக்க லாப ஈவு, அரசாங்க உத்தரவாதம் பெற்றது.

Simpan SSPN குறித்து மேலதிக தகவல்களுக்கு www.ptptn.gov.my எனப்படும் அதிகாரப்பூர்வ போர்ட்டல் அல்லது my PTPTN செயலி வழி விரைவான, துரிதமான, எளிதான பாதுகாப்பான சேவையைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here