சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலின் பொய் பிரச்சாரங்களை அரசாங்கம் தொடர்ந்து தடுக்கும்

சிப்பாங்:

சமூக தள பக்கங்களில் தகவல்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் இஸ்ரேல் தரப்பு நடவடிக்கைகளை தடுக்கும் செயல்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்ஸில் உறுதியளித்தார்.

அதிலும் பாலஸ்தீன போராட்டத்தின் மீதான ஆதரவை பாதிக்கக்கூடிய போலி தகவல்களை மலேசிய மக்கள் நம்பி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நியூ யார்க்கில் உள்ள டிக்டாக் தள நிறுவனத்தில் பணி புரியும் உயர் அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய இராணுவ பயிற்சி பெற்றவர் என்ற விவகாரத்திற்கு அரசாங்கம், தொடர்புத் துறை அமைச்சு, தொடர்பு- பல்லூடக ஆணையம் ஆகியவை எதிர்க்கும் நிலைப்பாட்டை முன்னதாக தரப்பினருடான சந்திப்பில் கூட நான் கூறியிருக்கின்றேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here