மிச்சிகன் (அமெரிக்கா):
மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் பின்னர் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நால்வர் பலியாகினர்.
அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்ததாவது, சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆராதனை நேரத்தில் நிகழ்ந்தது. எதிர்பாராதவிதமாக ஒருவர் தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதன்பின் கட்டிடத்தில் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். பலர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவத்துக்குப் பின்னர் தேவாலயத்தைச் சுற்றிய பகுதியை முடக்கியுள்ளனர். தாக்குதலின் காரணம் மற்றும் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





















