அலோர் ஸ்டார்:
லங்காவியில் பராசெய்லிங் நடவடிக்கையின் போது சுற்றுலா படகு கவிழ்ந்ததில் எட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
“நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் பந்தாய் தெங்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் என்று, லங்காவி துணை போலீஸ் தலைவர் சுப்ரீண்டு சம்சுல்முத்தீன் சுலைமான் தெரிவித்தார்.
அந்த படகில் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட ஆறு சுற்றுலாப் பயணிகளும், இரண்டு குழுவினரும் பயணித்தனர். அந்த நேரத்தில் ஒருவருக்கு பராசெய்லிங் நடந்துகொண்டிருந்தது. அவரை பாதுகாப்பாக கீழிறக்கினர்.
விபத்து ஏற்பட்டது பலத்த காற்றின் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர்,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஆரம்பத் தகவலின்படி எவருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை. தற்போது அனைவரும் சுல்தானா மலீஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.”





















