புத்ரா ஜெயா,
பூடி மடானி ரோன் 95 திட்டத்தில் இ ஹெய்லிங், பி ஹெய்லிங், டாக்சி, கி ஓட்டுனர்கள், குறிப்பிட்ட பகுதிகளில் மீனவ படகு தரப்பினருக்கும் இலக்கிடப்பட்ட பெட்ரோல் விற்பனை விரிவுபடுத்தும் ஆலோசனையை அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இச்சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆலோசனை உடனடியாக பரிசீலனை செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியமைச்சை ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் டத்தோ ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.
அதே சமயம் சிங்கப்பூர் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் மலேசியர்களுக்கும் இந்த சலுகையை விரிவுப்படுத்தும் விவகாரமும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.
இது சார்ந்த பதிவு அம்சங்களை போக்குவரத்து அமைச்சு வரையறுக்கும் என இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி கூறினார்.





















