கோலாலம்பூர்:
கெப்போங்கின் தாமான் டேசா ஜெயாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் மற்றும் 2 வாகனங்கள் எரிந்து நாசமாயின.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.42 மணிக்கு தமக்கு அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து, சுங்கை பூலோ மற்றும் ரவாங் ஆகிய தீயணைப்பு நிலையத்தின் உறுப்பினர்களின் உதவியுடன் செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் அனைவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூரில் மாநில செயல்பாட்டு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
“நாங்கள் வந்தவுடன், நான்கு வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தோம், அவற்றில் இரண்டு 70 விழுக்காடு எரிந்து அழிந்துவிட்டன, ஒரு வீடு 10 விழுக்காடு சேதமும் மற்றொன்று ஐந்து விழுக்காடும் சேதமடைந்துள்ளன. அத்தோடு இரண்டு வாகனங்களும் அழிக்கப்பட்டன.
இருப்பினும், இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
























