நிலை வாசப்படியில் வேப்பிலை,மா இலை!

ஒரு வீட்டில் நிலை வாசல் என்பது மிக முக்கியமான ஒன்று. நம்முடைய வீட்டு நிலை வாசப்படியில் வேப்பிலையோ அல்லது மா இலையோ கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த இலைகளை மாற்றினால் போதும். இவைகளை தினம்தோறும் புதிது படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

இதோடு சேர்த்து ஒரு வெள் எருக்கன் கட்டையை எடுத்துவந்து, சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு சிகப்பு கயிறு கட்டி நிலவாசப்படியில் தொங்கவிடுவது வீட்டிற்கு மிகவும் நன்மையை தரும். மேலும் அவற்றிக்கு தினம்தோறும் ஊதுபத்தி காண்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கும்.

மேலும் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு உள்ளே வரும்போதும்,  நிலை படியின் மேல் கால் வைத்து மிதித்து செல்லக்கூடாது. எப்போதுமே நில வாசல் படியை தாண்டி தான் செல்ல வேண்டும். நம்முடைய வீட்டு குழந்தைகள் நிலவாசல்ப்படியை, மிதித்தால் கூட, அப்படி மிதிப்பது தவறு என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக தினந்தோறும் காலை வேளையிலும், மாலை வேளையிலும் வீட்டில் தீபம் ஏற்றுவது வீட்டிற்கு வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு முக்கியமான விஷயமாக இருந்தாலும் வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, விஷ்ணு சகஸ்ர நாமத்தையும், கந்த சஷ்டி கவசத்தையோ அல்லது அஷ்டலட்சுமி பாடல்களையோ ஒலிக்க செய்வது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here