தாய்லாந்து காதலியை அடித்து காயப்படுத்திய வங்காளதேசிக்கு அபராதம்

மலாக்கா:

கடந்த வாரம் தமது தாய்லாந்து காதலியை நாற்காலி, இடைவார் கொண்டு அடித்து காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட வங்காளதேச ஆடவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

கட்டுமான தொழிலாளியான அந்த 41 வயது ஆடவருக்கு 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

இரு பிள்ளைகளுக்கு தந்தையான அந்த ஆடவர் குற்றப்பத்திரிக்கை வாசிக்கபட்டதும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ரடியா இந்த தீர்ப்பை வழங்கினார்.

முன்னதாக கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு 8.25 மணியளவில் மலாக்கா ராயாவில் உள்ள வீடு ஒன்றில் அந்த ஆடவர் இந்த குற்றத்தை புரிந்ததாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 324 கோ குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த ஆடவருக்கு இன்னும் கடுமையான தம்டனஒ வழங்கும்படி டிபிபி ஹனீஸ் அலியா பரிந்துரைத்தார்.

ஆனாலும் அந்த ஆடவர் இரு பிள்ளைகளை பராமரிக்க வேண்டும்.
மேலும் வங்காளதேசத்தில் அவருக்கு வயதான பெற்றோர் உள்ளனர்.
எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்குமாறு அவர் தரப்பு வழக்கறிஞர் கென்ட் டான் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து அந்த வங்காளதேசிக்கு 3,500 அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஒரு வேளஒ அபராத தொகையை செலுத்த தவறினால் 7 மாதங்க சொறஒ தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here