ECRL மின்கம்பிகள் களவு; மேலும் இருவர் கைது

தெமர்லோ:

ECRL எனப்படும் கிழக்கு கரை ரயில் திட்ட மின்கம்பிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு அந்நிய பிரஜை உட்பட மேலும் 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று மெந்தாகாப்பில் தொழிற்பேட்டை பகுதி ஒன்றில் உள்ள பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெமர்லோ போலீஸ் தலைவர் முகமட் நஷ்ய்ம் பஹ்ரோன் தெரிவித்தார்.

அதில் ஒருவன் 30 வயதுடைய உள்நாட்டு ஆடவன். மற்றொருவன் 28 வயதுடைய கம்போடிய பிரஜை. முன்னதாக சோதனையின் போது அந்த இருவரும் தப்பிக்க முயன்ற நிலையில் போலீசான் அவர்களை வெற்றிகரமாக பிடித்தனர்.

மேலும் அந்த உள் நாட்டு ஆடவரில்ன் கால் சட்டை பாக்கெட்டில் ஷாபு வகை போதை பொருள் கண்டெடுக்கப்பட்டது.

தோடு, அந்த பட்டறையில் மின்கம்பிகளை திருட பயனபடுத்தியதாக நம்பப்படும் கருவிகளும் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அந்த இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதும் சிறுநீர் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here