கோலாலம்பூர்:
பங்சாரில் உள்ள ஜாலான் மரோஃப்பில் 35 வயது நபர் ஒருவர் கிட்டத்தட்ட RM8,000 மதிப்புள்ள 262.2 கிராம் கஞ்சாவுடன் சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் 29 அன்று, இரவு 10 மணியளவில் ஜாலான் மரோஃப் என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில் வந்த சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளை கண்டு தடுமாறியதாகவும், அதனால் சந்தேகப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி, சோதனை நடத்தினர் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கு மாஷாரிமான் கு மஹ்மூட் கூறினார்.
“சோதனையின்போது RM7,866 மதிப்புள்ள 262.2 கிராம் கஞ்சாவை கண்டுபிடித்து, கைப்பற்றினர், மேலும் அவரிடமிருந்து 139 ரிங்கிட் ரொக்கப் பணம், எடை பார்க்கும் இயந்திரம் மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஏசிபி கு மாஷாரிமான் தெரிவித்தார்.
“குறித்த நபர் THC போதைப்பொருளை பாவித்திருப்பது அவரது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்ட்து என்றும், அவருக்கு முந்தைய போதைப்பொருள் குற்றப் பதிவு உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 பிரிவு 39B-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

















