கோலாலம்பூர்:
இஸ்ரேல் தரப்பினரான் பிடிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்எப் மலேசிய தன்னார்வளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று தலைநகர், சோகோ பேரங்காடி முன்புறம் நடத்தப்பட்ட பேரணியில் பேசப்பட்ட உரை பதிவுகளை போலீஸ் தரப்பு ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த பேரணியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வளர்கள் ஆகியோர் என அனைத்து உரைகளையும் பதிவு செய்துளோம் என டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃபாண்டி தெரிவித்தார்.
அதில் மதம், இனம், அரச கட்டமைப்பு (3ஆர்), மற்ற குற்ற அம்சங்கள் இருந்தால் விசாரணை அறிக்கை திறக்கப்படும்.
மேலும் எந்தவொரு தரப்பினரையும் அழைக்கும் முடிவு விசாரணையின் அடிப்படியில் மேற்கொள்ளப்படும்.
அதே சமயம் மொத்தத்தில் இந்த பேரணி எதிர்பார்த்ததை போல் அமைதியா நடைபெற்றது. அதில் எந்தவொரு எதிர்பாரா அசம்பாவிதங்களும் என்றார் அவர்.



















