GSF மலேசிய தன்னார்வளர்களுக்கு சிகிச்சையும் முழுமையான மருத்துவ பரிசோதனையும் வழங்க சுகாதாரத்துறை அமைச்சு தயார்

செர்டாங்:

தாயகம் திரும்பியுள்ள GSF மலேசிய தன்னார்வளர்களுக்கு சிகிச்சையும் முழுமையான மருத்துவ பரிசோதனையும் வழங்க சுகாதாரத்துறை அமைச்சு தயாராக உள்ளது.

குறிப்பாக தேசிய மனநல சுகாதார சிறப்பாற்றல் மையம் வாயிலால தொடர் நிலை மனநல ஆதரவும் அந்த பரிசோதனையில் அடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

அந்த தன்னார்வள நடவடிக்கையின் அவ்வப்போதைய நிலவரங்களை சுகாதாரத்துறை அமைச்சு அறிகின்றது.

மேலும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் நிலை குறித்தும் அமைச்சு தொடர்ந்து கண்கானிக்கிறது என்று சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடைபெற்ற 2025 மலேசிய மடானி இருதய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here