கோலாலம்பூர்:
சமீபத்தில் நடைபெற்ற ‘குளோபல் டிராவல் மீட்’ நிகழ்வில் நடைபெற்ற காலா இரவு விருந்தில் மது வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டியோங் கிங் சிங்.
“அந்த விருந்தின் உணவு மற்றும் பான ஏற்பாடுகள் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. இது டூரிசம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஒன்று அல்ல. எங்கள் பங்கு அங்கு நடந்த ‘விசிட் மலேசியா 2026’ ஆண்டுக்கான நிகழ்ச்சி அட்டவணையை அறிமுகப்படுத்துவது மட்டுமே,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விளக்கியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “அந்த விருந்தில் டூரிசம் மலேசியா எந்தவிதமான உணவு அல்லது பானங்களையும் வழங்கவில்லை. இது எங்கள் சுற்றுலா துறையின் கூட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தனியார் நிகழ்ச்சி,” என்றார்.





















