திரெங்கானுவில் இன்ஃப்ளூயன்ஸா கட்டுப்பாட்டில் உள்ளது ; பள்ளிகள் திறந்திருப்பதில் சிக்கலில்லை

கோல திரெங்கானு:

மாணவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா நோய்கள் இருந்தாலும், மாநிலத்தில் எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை என்று திரெங்கானு மாநிலக் கல்வித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பள்ளி செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தொற்றுநோய் பரவியதாக எந்த அறிக்கையும் இதுவரை பெறப்படவில்லை, நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதால், பள்ளி மூடல் தொடர்பான எந்த உத்தரவுகளும் வெளியிடப்படவில்லை என்று, மாநிலக் கல்வி இயக்குநர் கம்சா @ கமல் முகமட் தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளிகளுக்கும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பு வழிகாட்டுதல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் காய்ச்சல் அல்லது சளி-காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா தொற்று உறுதியான மாணவர்கள் முழுமையாக குணமடையும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவி, தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

அதேநேரம் சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், பள்ளிகள் உடனடியாக தங்கள் மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here