பெருமாள் கோவில், அனுமான் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக துளசி கொடுப்பார்கள். சிலர் இந்த துளசியை வாங்கியதும் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சிலர் அதை அப்படியே வாங்கிக் கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுவார்கள். இவை இரண்டில் எது சரி? கோவிலில் சுவாமிக்கு சாற்றிய துளசியை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதை சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.