வரவு செலவு திட்டம் 2026: TVET-க்கு RM 790 கோடி ஒதுக்கீடு!

கோலாலம்பூர்:

தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி பயிற்சி (TVET) துறையின் வளர்ச்சிக்காக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மொத்தம் RM 790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் வளர்ச்சித் தொழில்துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு துறையின் திறன் மேம்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தேசிய திவெட் மன்றம் (National TVET Council) ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி பெறும். மேலும், 10,000 தஃபீஸ் மற்றும் மத உறைவிடப் பள்ளி மாணவர்களுக்காக இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி ஒருங்கிணைப்பதற்கான நிதியும் இதில் அடங்கும்.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள திவெட் கல்விக் கழகங்களுக்கு வெ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மொத்தம் 79,000 மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறவுள்ளனர்.

அத்துடன், மனிதவள மேம்பாட்டு கழகம் (HRD Corp) மூலம் வெ.300 கோடி நிதியுடன் 30 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும். இப்பயிற்சிகள் குறிப்பாக உயர் தொழில்நுட்பம், இலக்கவியல் (Digital) மற்றும் எரிபொருள் பரிமாற்றத் துறைகளில் அமையவுள்ளன என்று அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here