மலாக்காவில் பூமிபுத்ரா தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு MARA RM.25 மில்லியன் ஒதுக்கீடு

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தில் பூமிபுத்ரா தொழில்முனைவோர் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக மஜ்லிஸ் அமானா ராக்யாட் (MARA) இந்த ஆண்டு கிட்டத்தட்ட RM.25 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி தொழில்முனைவோர் பயிற்சி, வழிகாட்டுதல், ஆலோசனைச் சேவைகள், சந்தைப்படுத்தல், மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் என்று, MARA தலைவர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டின் மூலம் கிட்டத்தட்ட 1,000 பெண் தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைந்துள்ளதாகவும், இது பெண்களின் பொருளாதார மற்றும் தொழில்முனைவோர் பங்குபற்றுதலை வலுப்படுத்துவதில் MARA நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“பெண்கள் குடும்பங்களின் முதுகெலும்பாக மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்க சக்தியாகவும் உள்ளனர்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

மலாக்காவில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட பூமிபுத்ரா பெண் தொழில்முனைவோர் உணவு மற்றும் பானம், தையல், அழகு, சில்லறை விற்பனை மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here