வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே பாலர்பள்ளிகள் திறக்கப்படும்; கல்வி அமைச்சகம் தகவல்

கோலாலம்பூர் : கட்டம் 1 மற்றும் 2 மாநிலங்களில் உள்ள வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பாலர்பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று வெளியான அறிக்கையில், தனியார், அனைத்துலக அல்லது வெளிமாநில பள்ளிகள் மற்றும் மன வளர்ச்சி மையங்கள் உட்பட அனைத்து தனியார் பாலர்பள்ளிகளும் 4-6 வயது குழந்தைகளுக்கு செயல்பட அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“அவர்களின் செயல்பாடுகள் வகுப்பறைகளின் அளவு மற்றும் உடல் ரீதியான தூரத்தைக் கவனிப்பது உட்பட நிலையான இயக்க நடைமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்” என்றும் அது தெரிவித்திருந்தது.

பாலர்பள்ளிப் பணியாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டால் பாலர்பள்ளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு மையங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here