“நடக்கும் பாதையில் இருள் இருந்தாலும்,
உள்ளம் காட்டும் ஒளியே உண்மையான வழிகாட்டி.”
இந்த வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு பயணி. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பெட்டிகளில் பயணம் செய்கிறோம். நாம் பயணிக்கும் ரயில் பெட்டிகள் ஒரு நிலையத்தில் வந்து நிற்கும். ஒவ்வொருவரும் தாங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தைப் பற்றிய பல சிந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துள்ளனர். நாம் ஆனந்தமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும், இந்தப் பயணம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்துகொண்டே இருக்கும். நிச்சயமாக நாம் சென்று சேரவேண்டிய இடத்தை நாம் அனைவரும் ஒருநாள் அடைவோம். இந்தப் பயணத்தில் இருப்பதே பெரும் பாக்கியமாகும். எனவே, நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை நினைவில் வைத்துக் கொண்டு, இந்தப் பயணத்தை இன்புறுங்கள். இப்போது இந்தப் பயணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அழகான தருணங்களை அனுபவியுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நமது உள்ளத்தின் தாகத்தைத் தணிக்கக்கூடியதைத் தேடத் தொடங்கும் போதுதான் நமது வாழ்க்கையின் உண்மையான பயணம் ஆரம்பமாகிறது. உள்ளம் நமக்குக் காண்பிக்க இருப்பதைப் பார்ப்பதற்க்குத் தேவையான அடிகளை நாம் எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில், நமக்கு ஒரு திசைக்காட்டி கருவி இருக்கிறது. நிறைவாக இருக்கவேண்டும் என்பதற்கான நம் உள்ளார்ந்த தாகம். அந்த தாகத்தைத் தேடி, தணிக்கப்படவேண்டி, இந்தத் திசைக்காட்டும் கருவி நம் உள்ளத்தை சுட்டிக்காட்டியவண்ணம் செயல்படுகிறது. அங்கேதான் தெளிவும், ஆனந்தமும் குடிகொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படையான பயணம் தெளிவுடன் ஆரம்பிக்க வேண்டும். அது மிகவும் அற்புதமான ஒன்றும், அழகான ஒன்றும் நம் உள்ளத்தில்தான் தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்வதே இந்த பயணத்தின் துவக்கம். இந்த பயணத்தில் நிறைவடைய வேண்டிய தேடல் மிகவும் உன்னதமானது. வாழ்க்கை ஒரு வரம் என்பதை உணர்ந்தவர்கள், துணிவோடு இந்த பயணத்தை மேற்கொள்வார்கள். இந்தப் பயணத்தில் வேறு எதையும் பார்க்க முடியாவிட்டாலும், உங்கள் உள்ளத்தில் இருக்கும் நிரந்தரமான ஒன்றை காண முடிந்தால், அதுவே இந்தப் பிறப்பின் உண்மையான பயனாகும்.
“நிறைவை எங்கே தேடுகிறோம் என்பது முக்கியமல்ல,
அதை உணர எங்கே பயணத்தைத் தொடங்குகிறோம் என்பதே முக்கியம்.”
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:
https://www.youtube.com/@PremRawatOfficial
https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB






















