விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

‘வெண்ணிலா கபடிகுழு’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆர்யன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here