முருகப்பெருமானின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது ஐப்பசி மாதம் அமாவாசை தினம் முடிந்த பிறகு என்பது ஆரம்பிக்கும். இது தொடர்ச்சியாக 6 நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும். இந்த கந்த சஷ்டி விரதத்தில் நாம் விரதம் இருக்கும் பொழுது எப்படி உலகத்தை அழிக்க வந்த சூரசம்ஹாரனை முருகன் வதம் செய்தாரோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் முருகப்பெருமான் வதம் செய்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வீட்டிலேயே வேல் வைத்து எப்படி வழிபாடு செய்வது என்று தான் நாம் பார்க்க போகிறோம்.
கந்த சஷ்டி வேல் வழிபாடு இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் என்பது அக்டோபர் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் புதிதாக ஒரு வேல் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் கூட போதும். தினமும் காலை, மாலை இரண்டு வேலையும் வேலிற்கு நம்மால் இயன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். குறிப்பாக பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், விபூதி போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யலாம். அதன் பிறகு ஒரு சிறிய சொம்பில் பச்சரிசி அல்லது விபூதியை நிரப்பி அதற்குள் வேலை வைத்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
பிறகு மலர்களால் அலங்கரித்து வேல் விருத்தம் பாராயணம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசமும் படிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய சிறந்தது. இயலாதவர்கள் பால் வைத்து கூட வழிபாடு செய்யலாம். வழிபாட்டிற்கு நம்பிக்கை தான் முக்கியம். தினமும் அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை தரும்.
ஆறு நாட்களும் வேலை வைத்து அபிஷேகம் செய்து வேல் விருத்தம் பாடி வழிபாடு செய்பவர்கள், சூரசம்கார நாளன்று அந்த வேலை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று அந்த வேலை முருகப்பெருமானின் உண்டியலில் சமர்ப்பித்து விட்டு வழிபாடு செய்ய வேண்டும். உலகத்தை அழிக்க வந்த சூரசம்ஹாரனை முருகன் எப்படி வதம் செய்தாரோ, அதே போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் முருகப்பெருமான் வதம் செய்வார் என்று கூறப்படுகிறது.
இந்த எளிமையான வேல் வழிபாட்டை கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கும் நாளிலிருந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் செய்பவர்களுக்கு வேலுண்டு வினையில்லை என்ற வார்த்தைக்கு இணங்க அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்