ஜோர்ஜ் டவுன்,
சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு சிறப்பு கழிவுகளை வழங்குவதை அரசாங்கம் உடடியாக நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக வரு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆண்டு இறுதி வரை போலீஸ் தரப்பு வழங்கும் 70% சம்மன் கழிவுகளும் இதில் அடங்கும்.
சம்மன்களுக்கான இந்த சிறப்பு கழிவுகள் சட்ட விதிகளை மெத்தனமாக பார்ப்பது மட்டுமன்றி அமலாக்க தரப்பினரின் பொறுப்புடைமையையும் பாதிக்கக்கூடும் என அச்சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதீர் கருத்துரைத்தார்.
சாலை போக்குவரத்து குற்றங்கள் தவறுகளை செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பெரும் அளவில் சிறப்பு கழிவுகள் வழங்குவது சட்ட விதிகளை மீறுவது ஏதோ சிறு விவகாரம் என்பதை போன்ற பின்பத்தை தருகிறது.
மேலும் இது சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
விபத்துகள் நிகழ்வதை தடுத்து உயிர்களை பாதுகாக்கவே சாலை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் சம்மன் சிறப்பு கழிவுகள் இந்த இலக்கிற்கு எதிர்ப்பாக உள்ளது. அதோடு சட்ட அமலாக்க செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாக விளங்குகின்றது என்று அவர் தமதறிக்கையில் விவரித்தார்.
எனவே தண்டனகள் நேர்மையாகவும் நிலையாகவும் விதிக்கப்படுவதை உறுதிச் செய்வதன் வழி சட்ட மாண்பினை நிமிரச் செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். சாலை சட்ட விதிகள் மதிக்கப்படுவதோடு அவை நிலையாக அமல்ப்படுத்த வேண்டும்.
போலீஸ், சாலை போக்குவரத்து அமலாக்க தரப்பினர் (ஜேபிஜே) அமலாக்க வலிமையில் கவனம் செலுத்தி குற்றம் செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் மொஹிதீன் அப்துல் காதீர் கூறினார்




















