தைப்பிங்கில் கேபிள் திருட்டு முயற்சி: நான்கு பேர் கைது

ஈப்போ :

தைப்பிங் தொழிற்கல்லூரி அருகிலுள்ள ஜாலான் காமுந்திங்–பத்து கூராவ் சாலையில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை போலீசார் சனிக்கிழமை (நவம்பர் 15) அதிகாலை கைது செய்தனர்.

சாலையோரத்தில் இருந்த கேபிள் மேன்ஹோல் மூடியை சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் அகற்றுவதைக் கண்டதாக ஒருவர், காமுந்திங் போலீஸ் நிலைய குழுவுக்கு வழங்கிய ரகசியத் தகவலின் பேரில் அதிகாலை 1.50 மணி அளவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று, தைப்பிங் ஓசிபிடி உதவி ஆணையர் முகமட் நசீர் இஸ்மாயில் தெரிவித்ததார்.

“தகவல் கிடைத்தவுடன் ரோந்து குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, 38 முதல் 41 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேகநபர்களை கைது செய்தது.

சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி மேன்ஹோல் மூடியை அகற்றிக்கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்,” என அதிகாரி தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், இரண்டு ஸ்க்ரூடிரைவர்கள். ஒரு பெரோடுவா மைவி கார் என்பன அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 379/511 (திருட்டு முயற்சி) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு பேரும் மூன்று நாட்கள் (நவம்பர் 17 வரை) போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here