அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக நூருல் இஸ்ஸாவை நியமிக்க அமிருடின் பரிந்துரை

கோலாலம்பூர்:

PKR துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வரை புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் சிலாங்கூரில் நியமிக்க தான் பரிந்துரைத்ததாக நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஒப்புக்கொண்டார்.

நூருல் இஸ்ஸாவிடம் தான் இந்த முன்மொழிவை தெரிவித்ததாகவும், அதை எடுத்துக்கொள்வது இல்லையா என்பது அவரது விருப்பம் என்றும் அமிருடின் கூறினார்.

நூருல் இசாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனை யாரும் வாரிசு அரசியல் என்று கூறி களங்கப்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையைச் சொன்னால், நான் நூருல் இஸ்ஸாவிடம் சொன்னேன், அவர் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறாரா இல்லையா என்பது அவருடைய விருப்பம்,” என்று அவர் சமீபத்தில் கைரி ஜமாலுதீன் மற்றும் ஷாரில் சுஃபியான் ஹம்தானின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் (Keluar Sekejap ) கூறினார்.

நூருல் இஸ்ஸா சிலாங்கூர் மாநிலத் தொகுதியில் போட்டியிட்டு சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கைரியின் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here