ஜோகூர்:
கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு விலை ஸ்டிக்கர் இல்லாதது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் காரணமாக, ஜோகூர் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகளுக்கு உள்ளூர் வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) மிகப்பெரிய அளவில் அபராதம் விதித்துள்ளது.
அமைச்சின் அமலாக்கப் பிரிவு கடந்த நாட்களாக மேற்கொண்ட திடீர் சோதனைகளில் பல வியாபாரிகள் சிக்கியதாக, ஜோகூர் மாநில இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் மொத்தமாக RM 675,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் விலை ஸ்டிக்கர் இல்லாதது – 1,671 வழக்குகள் (அபராதம்: RM 561,050), தவறான எடை/அளவு பயன்படுத்தி பொருள் விற்பனை – 442 வழக்குகள் (அபராதம்: RM 115,200) போன்ற குற்றங்கள் அடங்கும்.
தாமான் பெர்லிங் பொது சந்தையில் அமலாக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பின்னர், இது கட்டம் கட்டமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





















