கோலாலம்பூர்:
இன்று நடைபெறும் சபா மாநில சட்ட மன்ற தேர்தல் காலத்தில் நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 603 தேர்தல் குற்றங்களை தேர்தல் ஆணையம் (EC) பதிவு செய்துள்ளது.
மொத்தத்தில் 81 வழக்குகள் காவல்துறையிலும், ஐந்து வழக்குகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திலும் (MACC) புகார் செய்யப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ள புகார்கள் ECயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அதன் தலைவர் அதன் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள குற்றங்களில் பிரச்சாரப் பொருட்கள், பொருத்தமற்ற சுவரொட்டிகளை அகற்றுவது உட்பட நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் இன்று SK கவாங்கில் உள்ள வாக்குச் சாவடி மையத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“இன்று காலை 11 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு 31.3 சதவீதமாக இருந்தது. இது முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு என்றும், கடந்த தேர்தலில், இந்த நேரத்தில் சுமார் 32 சதவீதத்தைப் பதிவு செய்தோம், ஆனால் இதுவரை அது 31.3 சதவீதமாக உள்ளது எனறும் அவர் சொன்னார்.
“மதியம் வரை தெளிவான வானிலை தொடரும் என்றும்`, இதனால் வாக்குப்பதிவு கணிசமாக அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.
சபா தேர்தலின் ஆரம்ப முடிவுகள் இரவு 10 மணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது, நள்ளிரவில் முழு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்ற தனது முந்தைய அறிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





















