வயதான பக்கத்து வீட்டுக்காரரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு; சுங்கை பட்டாணியை சேர்ந்த ஆடவர் கைது

சுங்கை பட்டாணி:

பண்டார் லகுனா மெர்போக்கில், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி முகமட் சயீஃபுல் அக்மல் முகமட் ராசி வழங்கிய உத்தரவின்படி, அவர் டிசம்பர் 14 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்று, கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

இந்த வழக்கு, துப்பாக்கிகள் (அதிகரித்த அபராதங்கள்) சட்டம் 1971 பிரிவு 8 மற்றும் ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 8(a) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், சந்தேக நபரிடம் கெட்டமைன் போதைப்பொருள் இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று காலை சுமார் 8.45 மணி அளவில், துப்பாக்கியுடன் ஒருவர் மிரட்டியதாக வயதான பெண்மணி ஒருவர் அளித்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here