கோலாலம்பூர்:
ஏழு வங்கிகளில் 70 கணக்குகளைக் கட்டுப்படுத்தி, அதில் RM2.63 மில்லியன் (மலேசிய ரிங்கிட்) சேமிப்பு வைத்திருந்த பன்னாட்டுப் பணமோசடிக் கும்பலுடன் தொடர்புடைய மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 12) ஐந்து ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட டாங் காங் யங் (Tang Kang Yung), 35.என்ற ஆண்டவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 10 மாத சிறை, மற்றும் S$2,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் என்பன விதிக்கப்பட்டன. அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர் கூடுதலாக ஒரு வாரம் சிறையில் இருக்க வேண்டும்.
மோசடி மற்றும் கணினி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை டாங் காங் யங் கடந்த நவம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு மலேசியர்களான பெஸ்மாண்ட் ஹுவான் (Besmond Huan, 24) மற்றும் யேவ் சீ சியான் (Yew Chee Sian, 37) மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேசமயம், யேவ்-இன் மனைவியும், உடந்தையாகக் கருதப்படுபவருமான ஏஞ்சலின் சான் (Angeline Chan, 38) இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இந்தக் கும்பல், சிங்கப்பூர் வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றின் இணைய வங்கி உள்நுழைவுத் தகவல்களைத் திருடி, தங்கள் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் காவல்துறையினர் இணைந்து ஜோகூரில் இயங்கி வந்த ஒரு பணமோசடிக் கும்பலைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, டாங் காங் யங், ஹுவான் மற்றும் பிற மலேசியர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.





















