மாறிவரும் காலத்திற்கு ஏற்ப விவசாயத்துறை திறவுகோலாக பஞ்சி 2024 திட்டம் – துணைப் பிரதமர் தகவல்

எம். அன்பா,

செர்டாங்:

நாட்டின் விவசாயத்துறை மேம்பாட்டிற்கும் மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும் விவசாயத்துறை திறவுகோலாக பஞ்சி 2024 புதிய பரிணாமத்தை கொண்டுள்ளது. 2024 விவசாயக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது.

உணவுப் பாதுகாப்பிற்கு, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப விவசாயத்துறை அதன் புதிய பரிணாமத்தை காலத்திற்கு ஏற்ப தனித்துவத்தை கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஹாஜி ஃபடிலா பின் ஹாஜி யூசோப் கூறினார்.

செர்டாங், மெப்ஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற 2024 விவசாயக் கணக்கெடுப்பு சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

விவசாயம் அதன் சார்ந்த பல உருமாற்றச் செயல்முறைகள் மூலம் புதிய பரிணாம கட்டமைப்பு மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான செயல் நடவடிக்கைகளுடன் துரிதமான வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலிடம் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கிய தீர்மானங்கள், உற்பத்தி பற்றிய பல்வேறு புதுப்பித்தத் தகவல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப விவசாயத்துறையில் புதுமைகளின் கூறுகள் , அறிவார்ந்த செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ போன்ற சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதலாக விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கும் உணவு தயாரிப்பு ஆவணங்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பயன்மிக்க நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சி, மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அரசு சாரா ஏஜென்சிகளின் பங்களிப்புகள் மிகவும் அவசியமானது என அவர் கூறினார்.

இதன் வாயிலாக உணவு பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார். 2024 விவசாயக் கணக்கெடுப்பு சிறப்பு நிகழ்ச்சியில் விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் பின் சாபு, பொருளாதார அமைச்சர் சார்பில் தலைமைச் செயலாளர்,உட்பட அமைச்சின் தலைமை இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here