பெட்ரோல் விலை மேலும் குறைந்தது; டிசம்பர் 25 முதல் புதிய விலை அமல்

கோலாலம்பூர்:

டிசம்பர் 25 முதல் 31 வரையிலான காலபகுதியில், மானியம் இல்லாத RON97 மற்றும் RON95 பெட்ரோல் விலையை மலேசிய அரசாங்கம் குறைத்துள்ளது.

புதிய விலைப் பட்டியலின்படி, மானியமற்ற பெட்ரோல் RON95, லிட்டருக்கு 6 சென் குறைந்து, 2 ரிங்கிட் 56 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பெட்ரோல் RON97, லிட்டருக்கு 8 சென் குறைந்து 3 ரிங்கிட் 16 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 8 சென் குறைந்து, 2 ரிங்கிட் 94 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் RON95 விலை, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசாக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் (APM) கீழ் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here