பினாங்கின் சுங்கை பக்காப்பில் உள்ள ஒரு உணவகத்தில், கூர்மையான பொருட்களால் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தாக்கப்பட்டவர் உயிரிழந்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட மற்ற இருவரும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முகமூடி அணிந்த பதினைந்து பேர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பினாங்கு காவல்துறைத் தலைவர் அஸிஸி இஸ்மாயில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதாகவும், கொலைக்கான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதையும் அவர் மேலும் கூறினார்.

















