வீட்டுத் தோழர் 11 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து, இருவர் கைது

நெகிரி செம்பிலான் மான்டினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டில் இருந்த வீட்டுத் தோழர் 11 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததை அடுத்து, இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலாய் காவல்துறைத் தலைவர் ஜோஹாரி யஹ்யா, இந்த சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று மாலை 5.15 மணிக்கு குற்றம் நடந்த இடத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், சந்தேக நபர்கள் ஜனவரி 6ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here