கோலாலம்பூர்:
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் சில பகுதிகளில் நிலவி வரும் மோசமான வானிலை இன்று இரவு 8.00 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அறிவித்துள்ளது.
இந்த வானிலை சரவாக், கூச்சிங் (Kuching), செரியான் (Serian), சமரஹான் (Samarahan), அசஜயா (Asajaya), சபாவின் பகுதிகளான சிபிதாங் (Sipitang) மற்றும் பியூஃபோர்ட் (Beaufort), மேற்குக் கரை: ரானாவ் (Ranau) மற்றும் கோட்டா பெலுட் (Kota Belud), தாவாவ் பகுதி: தாவாவ் மற்றும் குனாக் (Kunak), சண்டக்கான் பகுதி: தெலுபிட் (Telupid) மற்றும் பெலூரான் (Beluran), குடாட் பகுதி: கோத்தா மருடு (Kota Marudu) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.
பலத்த காற்று வீசும் போது மரங்கள் விழுவதற்கோ அல்லது பலவீனமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கோ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை மாற்றங்கள் குறித்த உடனுக்குடன் தகவல்களைப் பெற MetMalaysia இணையதளம் அல்லது அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















