தோக்கியோவில் சளிக்காய்ச்சல் பரவல்: 6,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு – சுகாதாரத் துறை எச்சரிக்கை!

தோக்கியோ, ஜனவரி 29:

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் சளிக்காய்ச்சல் (Flu) மிக வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வார நிலவரப்படி, சுமார் 6,000-க்கும் அதிகமானோர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒரு பருவகாலப் பாதிப்பாக இருந்தாலும், இந்த ஆண்டு அதன் வேகம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, தோக்கியோவின் பல பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சில வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

பொது இடங்களுக்குச் செல்லும்போதும், கூட்ட நெரிசலான பகுதிகளிலும் முகக்கவசம் (Mask) அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினிகளைப் (Sanitizers) பயன்படுத்துவதன் மூலம் கிருமி பரவலைத் தடுக்கலாம், குளிர்காலம் நீடிப்பதால், தகுதியுள்ள நபர்கள் உடனடியாக சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளைப் (Flu Vaccine) போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here