கோலாலம்பூரில் JPJ அதிரடி நடவடிக்கை; 346 சம்மன்கள் – 110 வாகனங்கள் பறிமுதல்!

கோலாலம்பூர், பிப்ரவரி 16, 2026:

பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 14 இரவு 10 மணி முதல் பிப்ரவரி 15 அதிகாலை 5 மணி வரை ‘ஃபால்கன் யூனிட்’ (Falcon Unit) மூலம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

மாற்றங்கள் செய்யப்பட்ட 6 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் (ஜேபிஜே மூலம்) மற்றும் ஒப் செலாமாட் (Op Selamat) ஒருங்கிணைந்த சோதனையில் மொத்தம் 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

   

பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 346 நோட்டீஸ்கள் ஜேபிஜே அதிகாரிகளால் வழங்கப்பட்டன. அதில் 346 நோட்டீஸ்களில் உள்ளடங்கியுள்ள முக்கிய விதிமீறல்களாக, முறையான ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாமல் வாகனம் ஓட்டுதல், காலாவதியான சாலை வரி (Road Tax) மற்றும் காப்பீடு (Insurance) இல்லாமை, விதிகளுக்குப் புறம்பான பதிவு எண்கள் (Non-compliant Number Plates), அனுமதியின்றி வாகனத்தின் இன்ஜின் அல்லது அமைப்பை மாற்றியமைத்தல் என்பன அடங்கும்.

குறிப்பாக உயரமான கட்டிடங்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் எதிரொலிக்கும் உரத்த சத்தத்தை எழுப்பும் சைலன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சோதனையின் போது 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், போலீஸ் தடையைக் கண்டு பயந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி, எதிர் திசையில் (Against traffic flow) அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றார். இது பிற வாகன ஓட்டிகளுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. இறுதியில் அவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அவரது மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூர் ஜேபிஜே இயக்குநர் ஹமிடி ஆடம் கூறுகையில், பொது அமைதிக்கும் சாலைப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய வாகன மாற்றங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான மற்றும் கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here