கோலாலம்பூர், பிப்ரவரி 25, 2026:
மலேசியாவின் தீபகற்பத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள ஏழு பகுதிகளில் முதல் நிலை (Level-one) வெப்ப வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று விடுத்துள்ளது.
MetMalaysia தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, பின்வரும் பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
பெர்லிஸ் மாநிலம் முழுவதும் மற்றும், கெடாவில் குபாங் பாசு (Kubang Pasu), பாடாங் தெராப் (Padang Terap), போக்கோக் செனா (Pokok Sena), சிக் (Sik), பாலிங் (Baling) மற்றும் பண்டார் பாரு (Bandar Baharu) ஆகிய ஆறு மாவட்டங்கள் இந்த வானிலையை எதிர்நோக்கும்.
இந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது 35°C முதல் 37°C வரை பதிவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















