கல்வி நிறுவனங்களில் 66 புதிய பாலர் பள்ளி வகுப்புகள்: மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அமைச்சின் அதிரடி!

ஈப்போ, பிப்ரவரி 26, 2026:

மலேசியக் கல்வி அமைச்சின் (MOE) கீழ் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் இதுவரை மொத்தம் 66 பாலர் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வாங் கா வோ தெரிவித்துள்ளார்.

நேற்று ஈப்போவில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவன (IPGM) வளாகத்தில் நடைபெற்ற 2026 ‘அங்பாவ்’ திருவிழாவைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வகுப்புகள் பின்வரும் நிறுவனங்களில் பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்:

மடானி அரசாங்கத்தின் கீழ், பாலர் பள்ளி கல்வியைத் தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. “இக்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் பிறர், அமைச்சின் பாலர் பள்ளிக் கல்வியை அங்கேயே பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 150 பாலர் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்த ஆண்டு அமைச்சின் பல்வேறு நிறுவனங்களில் மேலும் 350 புதிய பாலர் பள்ளி வகுப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு சுமார் 3,70,000 பாலர் பள்ளி மாணவர்களில், 2,20,000 பேருக்குக் கல்வி அமைச்சு இடமளித்தது. மீதமுள்ள மாணவர்கள் Kemas, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை மற்றும் தனியார் பாலர் பள்ளிகளில் கல்வி பயின்றனர்.

அரசு நிறுவனங்களின் கீழ் இயங்கும் பாலர் பள்ளிகள் முற்றிலும் இலவசமானவை என்றும், தனியார் பள்ளிகளுடன் இணைந்து இவை நாட்டின் ஆரம்பக்காலக் கல்விச் சூழலை (Ecosystem) வலுப்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here