சிம்ரன் சொன்ன ஒரு வார்த்தை.. நெஞ்சில் கைவைத்து திகைத்து போன சரத்குமார்!

முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார். வரலட்சுமி தற்போது ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து, இயக்குகிறார். இத்துடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்டோரும்’ நடித்துள்ளனர்.

இதன் பட விழாவில் சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ‘உங்கள் அழகுக்கு என்ன காரணம். ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருக்கிறீர்களே…’ என்று கேட்கப்பட்டது.

இதற்கு சிம்ரன் பதிலளிக்கையில், “உடற்பயிற்சிதான் முக்கிய காரணம். தினமும் குறைந்தபட்சம் 4 தடவை உடற்பயிற்சி செய்கிறேன்’, என்று சொன்னதும், பின்னால் அமர்ந்திருந்த சரத்குமார், ‘என்னது… தினமும் 4 தடவை பயிற்சியா…’ என்று நெஞ்சில் கைவைத்து திகைத்து போனார். பின்னர் சிம்ரன் சிரித்துக் கொண்டே, ‘சாரி சார். சாரி சார். வாரத்துக்கு 4 முறை’ என்று சரத்குமாரிடம் தெரிவிக்க, அனைவருமே சிரித்து விட்டனர். உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதில் திரையுலகினர் பலருக்கும் சரத்குமார் ‘ரோல்மாடல்’ ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here