பூசமும் சிவ வழிபாடும்

பூச நட்சத்திர நாளன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பிறவிப் பிணியை நீக்க முடியும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள். எனவே  பூச நட்சத்திர நாளன்று நதியில் நீராட வேண்டும். நீராடி விட்டு அந்த நதிக்கரையில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கும் சிவபெருமானை முழு மனதுடன் சரணாகதி அடைய வேண்டும். பிறகு கோவிலை 19 முறை வலம் வர வேண்டும். தொடர்ந்து 5 பூச நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு மேற்கொண்டு வருபவர்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். மறுபிறவி என்பது இருக்காது. நற்கதி பேரு கிடைக்கும்.

அதனால்தான் சித்தர்கள் பலரும் பூச நட்சத்திரத்தை தேர்வு செய்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வள்ளலார் தைப்பூச நாளை தேர்ந்தெடுத்து தான் ஜோதியில் ஐக்கியமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here