சீரியல் நடிகையிடம் நகை மோசடி.. கண்கலங்கி வீடியோ வெளியிட்ட தாமரை…

சென்னை,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர் தாமரைச்செல்வி. பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். இவர், சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் பார்த்தசாரதி. துணை இயக்குனர் ஒருவர் இவர்களுடன் குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளார். அவசர தேவைக்காக பணம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லாததால் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை அவரிடம் கொடுத்து அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளும்படி கூறி உள்ளனர். அய்யப்பன்தாங்கல் பகுதியில் துணை இயக்குனர் பெயரிலேயே நகையை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு நகையை மீட்க சென்றபோது, அந்த நகையை துணை இயக்குனரே மீட்டு, கூடுதல் தொகைக்கு விற்று விட்டதாக தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாமரைச்செல்வியின் கணவர் பார்த்தசாரதி அளித்த புகாரின்பேரில் போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகும் படி துணை இயக்குனருக்கு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோக்களை நடிகை தாமரைச்செல்வி, சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here