எல்லாம் ரெடி.. ஆனா ஒரு பிரச்சினை! காசா மீது படையெடுப்பை இஸ்ரேல் தொடங்காமல் இருக்க என்ன காரணம்?

டெல் அவிவ்: காசா எல்லையில் இஸ்ரேல் தனக்குத் தேவையான அனைத்து ராணுவத்தையும் குவித்தாலும் தரைவழி தாக்குதலைத் தொடங்காமல் தாமதித்து வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் 1300 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசா பகுதியை நோக்கி சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கே போர் தொடர்ந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது. காசா எல்லையில் ராணுவ தளங்களை அமைந்துள்ள இஸ்ரேல் படை, அங்கே பீரங்கிகளையும் குவித்து வருகிறது. அடுத்த கட்டமாகக் காசா மீது முழு வீச்சில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் என அஞ்சப்படுகிறது.

படையெடுப்பு: இதற்கிடையே அரபு நாடுகள் பால்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால், மிக மோசமான விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. கடந்த 2008இல் காசா மீது படையெடுத்து மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்ற நிலையில், அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் படையெடுக்க ரெடியாகிறது.

இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்த நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகக் காசா எல்லையில் இஸ்ரேல் புதிய ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. மேலும், சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்களையும் பீரங்கிகளையும் எல்லையில் குவித்து வருகிறது. எல்லாம் ரெடி செய்த பிறகும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்க தாமதப்படுத்துகிறது. எது ஏன் என்பது குறித்து பாகர்களாம்.

காரணம் 1: இதற்கு ஒரு முக்கிய காரணம் எங்கே நிலவும் வானிலை.. தற்போது காசா பகுதியில் மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. இப்படி இறுக்கும் போது பைலட்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தரைப்படைகளுக்கு உரிய முறையில் பாதுகாப்பை வழங்க முடியாது. இஸ்ரேல் காத்திருக்க இதுவும் ஒரு காரணமாகும்.

முக்கிய காரணம் இதுதான்: படையெடுப்பை இஸ்ரேல் தாமதப்படுத்த மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது ஹமாஸ் படை இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர் பலரை பிணையக் கைதிகளாக தங்கள் சுரங்கங்களை வைத்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பிக்க யோசிக்க இதுவே முக்கிய காரணமாகும்.

காசாவில் உள்ள இந்த சுரங்கங்கள்தான் ஹமாஸ் படைக்குப் பெரிய சவாலாக நிச்சயம் இருக்கும்.. இதனால் தரைவழித் தாக்குதல் போது இஸ்ரேல் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.. மறைந்திருக்கும் எதிரிகளை மிக நெருக்கமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சிக்கலான சுரங்கங்களும் அங்குள்ள அடர்த்தியான மக்கள் தொகையும் தான் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை ஆரம்பிக்கத் தாமதிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

காரணம் 2: அதேபோல இஸ்ரேல் இந்தத் தரைவழி தாக்குதலைத் தொடங்கினால் நிச்சயம் ஹமாஸ் படை தன்னிடம் உள்ள பிணையக் கைதிகளை வைத்து மிரட்டுவார்கள். எனவே, அவர்களை எப்படியாவது முதலில் காப்பாற்ற வேண்டும் என்ற கோணத்திலும் இஸ்ரேல் ராணுவம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் விதித்த காலக்கெடு முடியும் நிலையில், இஸ்ரேல் விரைவில் தனது அடுத்த பிளானை ஆரம்பிக்க உள்ளது. போர் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அனைத்து வாய்ப்புகளும் இருக்கும் நிலையில், அங்குள்ள அப்பாவி மக்களின் நிலைதான் மிகவும் மோசமாக இருக்கிறது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here