உம்ரா கடமையை நிறைவேற்றச்சென்றபோது காணாமல்போன ‘பாக் தாம்’ என்றார் ஆடவர் ஒரு மாத்தித்தான் பின்னர் பாதுகாப்பாக மீட்பு!

கோலாலம்பூர் | மார்ச் 30, 2026

கடந்த மாதம் புனித மக்கா நகரில் உம்ரா கடமையைச் செய்யச் சென்றபோது காணாமல் போன 45 வயது மலேசியப் பயணி முகமட் ஷாஹிர் சாயுதி அகமது (Mohd Syahir Sayuti Ahmad), இன்று பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ‘பாக் தாம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அவர் மீட்கப்பட்ட செய்தி அவரது குடும்பத்தினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை மலேசிய நேரப்படி 9:30 மணியளவில் (சவூதி நேரப்படி அதிகாலை 4:30 மணி) மக்காவில் உள்ள ஒரு மசூதியில் பணியாற்றும் இந்தோனேசியத் தொழிலாளி ஒருவர் பாக் தாமை தற்செயலாகக் கண்டார்.

பாக் தாம் வைத்திருந்த பையில் இருந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு, அந்தத் தொழிலாளி உடனடியாக அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

பாக் தாம் பாதுகாப்பாக இருப்பதை அவரது உறவினர் நூர் ஷஃபினி சைனல் அபிதீன் (Nur Syafini Zainal Abidin) உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் மஸ்ஜிதுல் ஹராமில் (Masjidil Haram) உம்ரா கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது பாக் தாம் காணாமல் போனார். மசூதியின் கூரைப் பகுதியில் (Rooftop) சுன்னத் தவாஃபை முடித்துவிட்டு, இஷா தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் அவர் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து சென்றார். பல வாரங்களாகத் தேடியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது.

தற்போது பாக் தாம் மக்காவில் உள்ள பயண முகமையின் (Travel Agency) பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் நலமுடன் இருப்பதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கான விமானப் பயண ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளைப் பயண முகமை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பல வாரங்களாக நீடித்த கவலைக்கு இன்று ஒரு சுபமான முடிவு கிடைத்துள்ளது என அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here